"தண்ணி, மரம், பாறை, காத்து... பெரிய இருட்டு அப்படியே மூடிடுச்சு" - மறுபிறவி எடுத்த சிறுமி நேரில் கண்ட திக் திக் காட்சி

x

ரணங்களால் நிறைந்துள்ள வயநாட்டில், நிலச்சரிவால் ஏற்பட்ட கோரங்களை கண்முன் கண்ட மக்கள் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை பகுதிகளில் மக்களின் கதி என்ன என்றே தெரியாமல் உள்ளது..

இப்பகுதியில் தேயிலை தொழிலாளர்கள் பலர் வசித்து வரும் சூழலில், ஏராளமான சுற்றுலா வாசிகளும் இருந்துள்ளனர்.

அப்படி சுற்றுலா வந்தவர்களில் இரண்டு மருத்துவர்கள் நிலச்சரிவில் காணாமல் போய்விட்டதாக வேதனை தெரிவிக்கிறார் ராமச்சந்திரன்..

இதே போல் மேப்பாடியில் இருந்து தப்பி பிழைத்த சிறுமி பேசுகையில், நிலச்சரிவில் தான் போராடிய திக்..திக்..நிமிடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த கோரத்தை எல்லாம் கடந்து வந்த மக்கள் பயத்துடனே இருந்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார் வயநாட்டை சேர்ந்த ஜோசப்..

இதற்கு ஏற்றப்படி, கேரள அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக்கூடும் என்பதால், அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், முகாம்களில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் குறித்த பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மீட்பு பணிக்காக வருவோர் கூட நேரடியாக வயநாட்டிற்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது கேரள அரசு.


Next Story

மேலும் செய்திகள்