வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு நேர்ந்த கொடுமை... கேரளாவே பரபரக்க..ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

x

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேப்பாடி கிராம பஞ்சாயத்து மூலம் கெட்டுப்போன அரிசி மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனா். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும், உறவினா்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், மேப்பாடி கிராம ஊராட்சியால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து விஜிலென்ஸ் விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பழைய இருப்பில் இருந்த பொருட்கள் வழங்கப்பட்டதா அல்லது உணவு தானியங்கள் மாற்றப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்