`இளைஞர்களே..’ "உயிரை எடுக்கவும் தயார்" - மடாதிபதி சர்ச்சை பேச்சு
வக்ஃப் விவகாரத்தில் உயிர் கொடுக்கவும் அல்லது உயிரை எடுக்கவும் தயார் என கர்நாடக மடாதிபதி ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் நிலங்களை திரும்ப ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்நிலையில் கலபுர்கியில் வக்ஃபு பிரச்சினைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது, மருளராதியா சிவாச்சாரியார் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை, பேனாவிற்கு பதிலாக வாளை பயன்படுத்துமாறும், வாள் வைத்திருப்பவர்கள் அனைவரும் தலையை துண்டிக்க தயாராகுமாறும் மடாதிபதி பேசியிருந்தார். மேலும் வக்ஃபுக்காக உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கீழ் மடாதிபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.