சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் கட்டாய ரூ.100/-..எல்லா டாக்குமெண்ட் இருந்தாலும் குடுக்கணும்..
திருமாந்துறை சுங்க சாவடி அருகே சபரிமலை பக்தர்களிடம், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை சுங்கசாவடி அமைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், திருமாந்துறை சுங்கசாவடி அருகே, சபரிமலை செல்லும் பக்தர்களை குறிவைத்து, மூன்று போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் பணம் வசூல் செய்து வருகின்றனர். வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்களும் இருந்தாலும், கட்டாய வசூல் செய்வதாக புகார் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் லஞ்சம் பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
Next Story