மணமகனுக்கு வந்த ரூ.நோட்டு மாலை..எடுத்துக்கொண்டு ஓடிய டிரைவர்..உயிரை பணையம் வைத்து மணமகன் செய்த செயல்
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் மணமகன் கழுத்தில் இருந்த் ரூபாய் நோட்டு மாலையில் இருந்து ரூபாய் நோட்டை பறித்துக் கொண்டு ஓட்டுநர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கல்யாணத்தை மறந்து விட்டு ரூபாய் நோட்டை உருவியவரைத் துரத்திச் சென்ற மணமகன் ஓடும் வாகனத்தின் கதவில் தொங்கிக் கொண்டு காரை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்... அவர் நிறுத்தாததால் சினிமா பாணியில் உள்ளே புகுந்த மணமகன், ஓட்டுநர் வண்டியை நிறுத்தியதும் சரமாரியாக தாக்கினார்...
பின்னர் மணமகன் வீட்டாரும் வந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story