சந்தோசமாக ஆடிப்பாடியவர்... சுருண்டு விழுந்து பலி... கதறி துடித்த கல்யாண விடு - காண்போரை கலங்கடிக்கும் காட்சி

x

கர்நாடகாவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், டி.ஜே இசைக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. பகடலபண்டே கிராமத்தில் நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆதர்ஷ் என்ற 23 வயது இளைஞர் டிஜே இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் சுருண்டு கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்