கிளாஸுக்குள் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்.. 8 வயது மாணவனின் தலையை சுவற்றில் முட்டி செய்த கொடூரம்
வகுப்பறையில் ஆசிரியர் ஆபாச படம் பார்த்ததைக் கண்டுபிடித்த 8 வயது சிறுவனின் தலையை அந்த ஆசிரியர் சுவரில் மோதிய அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஜான்சி நகரில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு ஆசிரியர் குல்தீப் யாதவ் ஆபாச படம் பார்த்துள்ளார். இதைப் பார்த்த அந்த 8 வயது மாணவன் தன் சக நண்பர்களுடன் சேர்ந்து பேசி சிரித்ததைக் கண்டு ஆத்திரமடைந்த குல்தீப் யாதவ், சிறுவனின் தலையை சுவரில் பலமாக மோதியதுடன் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் குல்தீப் யாதவைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story