நேருக்கு நேர் மோதி பற்றி எரிந்த லாரி - உள்ளே இருந்த ஓட்டுநர்கள் நிலை?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், லாரி ஓட்டுநர் இடர்ப்பாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹமீர்பூர் மாவட்டத்தின் சுமெர்பூர் பகுதியில், 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு லாரியில் இருந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிர்தப்பிய நிலையில், மற்றொரு லாரியின் ஓட்டுநர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும், மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story