கொடூரமாக தாக்கிய சிறுத்தையை கையாலேயே அடித்து கொன்ற இளைஞர் - வியந்து பார்த்து செல்லும் மக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை தாக்கிய சிறுத்தையை இளைஞர் ஒருவர் கையாலேயே அடித்து கொன்றுள்ளார்.
சுல்தான்பூர் கிராமத்திற்கு அருகே இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிறுத்தை ஒன்று தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் இளைஞர் படுகாயம் அடைந்தார். இருப்பினும் மனம் தளராத இளைஞர், சிறுத்தையுடன் விடாமல் சண்டையிட்டு, அதனை அடித்தே கொன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை வனத்துறையினர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இளைஞரின் இந்த வீரச்செயல் அப்பகுதி மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
Next Story