எதுவும் தெரியாமல் மடிந்த குழந்தைகள்...ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு... கூடவே பறந்த பரபர உத்தரவு
உத்திரப் பிரதேசம் ஜான்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவித்துள்ளார்...
தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்ச ரூபாயும், காயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்... மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக ஜான்சியின் கோட்ட ஆணையர் மற்றும் டிஏஜி ஆகியோர் அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story