``ஒரு நாளைக்கு 5 லட்சம்.. UPI கட்டண முறை..'' - செபி பரிந்துரை | UPI | SEBI
பதிவு செய்யப்பட்ட சந்தை இடைத்தரகர்களுக்கான பாதுகாப்பான U.P.I. கட்டண முறையை செபி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட சந்தை இடைத்தரகர்களுக்கு, ஒரு தனித்துவமான U.P.I. முகவரியை உருவாக்குமாறு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தனித்துவமான U.P.I. முகவரி, முதலீட்டாளர்கள் தங்கள் பணம், பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்களுக்கு மட்டுமே சென்றடைகிறது என்பதை உறுதிப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மூலதனச் சந்தை பரிவர்த்தனைகளுக்கான U.P.I. கட்டண வரம்பு ஒரு நாளைக்கு 5 லட்சமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Next Story