நாடாளுமன்ற கூட்டத்தொடர் - பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, வரும் 31ஆம் தேதி கூட்ட, குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம், ஜனவரி 31 முதல், பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம், மார்ச் 10ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதமும், பிரதமரின் பதிலுரையும், தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும்.
Next Story