வரி குறையுமா..? வருமானம் உயருமா..? - சூசகமாக சொன்ன PM மோடி... காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

எதிர்வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், எதிர்வரும் நிதியாண்டில் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைவாசி குறையும் என கணிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-26 ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்