சரசரவென குறைந்த தக்காளி விலை.. ஆத்திரத்தில் செடிகளை கொளுத்திய விவசாயி
தெலங்கானாவில் விலைவீழ்ச்சி காரணமாக, தக்காளி செடிகளை விவசாயி தீயிட்டு எரித்தார். தெலங்கானாவில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. இதனால் தக்காளியை பறித்து சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு, அடிப்படை செலவுத்தொகை கூட கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மேதக் மாவட்டம் நவாப்பேட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளிகளை செடியோடு பிடுங்கி தீ வைத்து எரித்தார்.
Next Story