திருப்பதியில் பௌர்ணமி கருட சேவை - குவிந்த கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பௌர்ணமியையொட்டி, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
Next Story