திருப்பதியை உலுக்கிய சம்பவம்.. தமிழக பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை பொய்யானது என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண், உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழே விழுந்து மிதிபட்டு இறந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க மறுத்த மல்லிகாவின் உறவினர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story