திருப்பதி மலையில் திடீர் பயங்கரம் - அலறிய பக்தர்கள்... அதிர்ச்சி காட்சி

x

திருப்பதி மலையில், வாகன நிறுத்தப்பட்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்திருந்திருந்தனர். அவர்களது கார், திருப்பதி மலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அந்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து பக்தர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். கார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்