திருப்பதியை உலுக்கிய 6 பேர் மரணம்.. யார் காரணம்? - வெளியான அதிர்ச்சி தகவல்

x

திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவுன்ட்டர் அருகே உள்ள கேட்டை போலீசார் திறந்துவிட்டதே, பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட காரணம் என்றார். நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நலம் விசாரிக்கவும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வர உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த உடன் டெலிகான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்ட சந்திராபாபு நாயுடு, அவர்களின் அஜாக்கிரதை போக்கை கடுமையாக கண்டித்ததாகவும் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்