திருப்பதியே மணமணக்க 9 டன் எடை, 17 வகை மலர்களால் நடந்த புஷ்ப யாகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் எடையுள்ள மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்தின் தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு வகையான மலர்கள், இலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மலையப்ப சுவாமிக்கு 17 வகையான மலர்கள், 6 வகையான இலைகளைக் கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 5 டன், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 டன் எடையுள்ள மலர்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story