திகாரில் கெஜ்ரிவால்... TV பாக்கலாம், சப்ஜி சாப்பிடலாம்... சிறையில் வசதிகள் என்னென்ன..? வெளியான லிஸ்ட்

x

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவல் முடிந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலை வருகிற 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறை எண் இரண்டுக்கு கெஜ்ரிவால் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிறையில் இருவேளை தேநீர் மற்றும் ரொட்டி துண்டுகள், மதியம் மற்றும் இரவு உணவாக பருப்பு, ஐந்து ரொட்டிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்க்கரை நோய் உள்ளதால், கெஜ்ரிவாலை 24 மணி நேரமும் கண்காணிக்க மருத்துவர்கள் உள்ளனர். வாரத்திற்கு 2 முறை குடும்பத்தாரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்