பட்டப்பகலில் கத்தி முனையில் நகைகளை அள்ளிச்சென்ற கும்பல்... போராடிய ஓனர் - ஷாக்கிங் வீடியோ

x

ஹைதராபாத்தில், நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்த கொள்ளையர்கள், உரிமையாளரை தாக்கி மொத்த நகைகளையும் சுருட்டிக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அக்பர் பாக் பகுதியில், முகமது உக் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில், முகத்திற்கு மாஸ்க் மற்றும் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்மநபர்கள் 3 பேர், வாடிக்கையாளர்கள் போல் ஒருவர் பின் ஒருவராக கடையில் நுழைந்து, உரிமையாளரை தாக்கி, கத்தி முனையில் சுமார் 150 கிராம் எடையுள்ள நகைகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்