தியேட்டர் போய் படம் பார்ப்பவர்களா நீங்கள்? - இத பாத்த அப்புறம் ஒரு செகண்ட் யோசிப்பீங்க..

x

பாப்கார்ன் வகைக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ள நிலையில், அதன் முழு விவரத்தை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

திரையரங்க டிக்கெட் கட்டணத்தை கண்டு ஷாக்கில் இருப்பவர்களுக்கு மேலும் ஷாக் கொடுத்திருக்கிறது அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன...

இதில் செறிவூட்டப்பட்ட அரிசி வித்துக்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியில் இருந்து மரபணு சிகிச்சைக்கு விலக்களிக்க வேண்டும், வணிக ஏற்றுமதியாளர்களுக்கு விநியோகிக்கும் சரக்குகளுக்கு இழப்பீட்டு செஸ் வரியை குறைக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது..

இதனிடையில் பாப் கார்னுக்கு வரி விதிப்பு குறித்த முடிவு தான் பரபரப்பாக பேசப்பட்டது...

உப்பு மற்றும் மசாலா சேர்க்கப்படாத பாப்கார்ன் பாக்கெட்டில் அடைக்கப்படவில்லை என்றால் அதற்கு 5 சதவீதம் ஜி எஸ்டி விதிக்கப்படுகிறது...

ஒருவேளை பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தால் அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிப்படவுள்ளது...

அத்துடன் சர்க்கரை கலந்த கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது...

ஒரே தயாரிப்புக்கு தனித் தனி வரியா என பலரும் கேள்வி எழுப்ப, பாப்கார்ன் பிரியர்களோ இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்...

இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்...

சாதாரண பாப்கார்ன் உப்பு உணவு வகைகளில் வருவதால் 5 சதவீத வரி விதிக்கப்படுவதாகவும், இதுவே பேக் செய்யப்படும்போது 12 சதவீத வரி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அது இனிப்பு பண்டமாக கருதப்பட்டு, பொதுவாக இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி இந்த பாப்கார்னுக்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், பாப்கார்ன் விலையில் மாற்றப்படுமா என தெளிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்