PM மோடியிடம் நேரில் சொன்ன நாயுடு... உற்றுநோக்க வைத்த முக்கிய சந்திப்பு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவில் 65 ஆயிரம் கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் அமராவதி தலைநகர் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார். இந்த அடிக்கல் நாட்டு விழா மே 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
