நாட்டையே ஆளும் பாஜக-வின் 20 வருட கனவு...ஏக்கம்... யார் கையில் ஆட்சி?

x

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அங்கு சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மாநிலத்தில் 4 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிரம் காட்டுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க பாஜக அதிதீவிரம் காட்டுகிறது. ஆம் ஆத்மி 70 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது, காங்கிரசும் 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து, பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்ய தீவிரம் காட்டுகிறது. இந்த வேளையில் மாநிலத்தில் தேர்தல் அறிவிப்பை வருகிற 6 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்