வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. மந்தமாக மாறிய ஊட்டி.. பாதித்த வாழ்வாதாரம்

x

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வார விடுமுறையில் நீலகிரிக்கு வரும் கேரள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், சுற்றுலாவை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்