மனமுருகி ஐய்யப்பனை நினைத்த நேரம்..திடீரென கண்முன் வந்த சிறுத்தை..பயத்தில் உறைந்து போன பக்தர்கள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடிக்கொண்டிருந்தபோது அங்கும் இங்கும் ஒடிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே உள்ள பிதர்காடு பாலாப்பள்ளி பால பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நேற்று இரவு ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடி சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சாலை வழியாக வந்த சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக ஓடி காட்டுக்குள் சென்று மறைந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்த சிலர் செல்போனில் அதனை படம் பிடித்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்