"அம்மாடியோ.." முன்னாள் கான்ஸ்டபிள் வீட்டில் கட்டு கட்டாக பணம் - சிக்கியது எப்படி?
மத்திய பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் போபாலின் மிண்டோரி வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார், ரியஸ் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் போக்குவரத்துத்துறை முன்னாள் கான்ஸ்டபிள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 40 கிலோ வெள்ளி கட்டிகளும், கட்டுக்கட்டாக பணமும் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story