சிக்கிய முதியவர்... விபூதி அடித்த கும்பல் - கோடி கணக்கில் சுருட்டல்

x

வட இந்தியாவை சேர்ந்த 67 வயது அஷித் குமார் மித்ரா புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் வசித்து வரும் நிலையில் தனது 7 வயதில் இருந்தே புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் தன்னை பக்தராக இணைத்து கொண்டு சேவைகள் செய்து வருகிறார். அது மட்டுமின்றி நீண்ட வருடங்களாக ஷேர் மார்கெட்டில் பணம் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரை ஷேர் மார்கெட் என்கிற வாட்ஸ் ஆப் குழுவில் அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்துள்ளனர். அதன் மூலம் சிறிய முதலீடு பெரிய லாபம் என ஆசை காட்டி சிறு, சிறு தவணைகளாக 6 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளனர்... முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாதபடி வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மற்றொரு வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த ஒருவரிடம் தனது பணம் குறித்து கேட்ட போது இந்த 6 கோடியை மீண்டும் பெற வேண்டும் என்றால் கூடுதலாக பணம் முதலீடு செய்ய வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஷித் குமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்