அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு... அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு பேட்டி

x

எந்த விவாதத்திற்கும் அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைத்து கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கேட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எந்த சலசலப்பும் ஏற்படாமல் இரு அவைகளும் ஆக்கப்பூர்வமான முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அரசியலமைப்பு தினத்தையொட்டி, நவம்பர் 26ஆம் தேதி இரு அவைகளும் நடைபெறாது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்