#BREAKING || மேகதாது விவகாரம் - பெரும் ஷாக் கொடுத்த கர்நாடகா
அணை கட்டுவதற்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, காவிரி மண்டல வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்கள் மாற்றாக நிலங்களை வழங்கும் இடங்கள் தேர்வு... 5096.24 ஹெக்டேர் காவிரி மண்டல வனப்பகுதி நிலங்களை கையகப்படுத்தி அதற்கு மாற்றாக ராம்நகர் மண்டியா மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் 7404.62 ஹெக்டேர் மாற்று நிலம் வழங்க முடிவு. மேகதாது அணை கட்ட 229.60 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கும். இதேபோல் காவிரி மண்டல வனப்பகுதியில் 4866.60 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தவிர 160.81 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்து வேண்டியதாக தகவல். சங்கமா, முத்தத்தி, மடிவாளா, கொக்கேதொட்டி மற்றும் பொம்மசந்திரா ஆகிய கிராமங்களில் வசிக்கும் 233 குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படும்... இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.