கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு
கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், உத்தவ் சிவசேனா கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் மகராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதியை இடித்தவர்களை வாழ்த்தும் வகையில் உத்தவ் சிவ சேனா சார்பில் சமீபத்தில் செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
Next Story