Free-சார்ஜ் ❌ - Re சார்ஜ் ✅ - காவல்துறை அதிரடி அறிவிப்பு

x

கேரள மாநில காவல் துறை, அதன் சமூக வலைத்தள

பக்கத்தில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து

அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறைந்த

கட்டணத்தில் செல்போன் ரீசார்ஜ் செய்வதாக சமூக

வலைத்தளங்களில் விளம்பரங்கள் வருவதாகவும்,

அது மோசடி என்றும் இதில் குறிப்பிட்டுள்ளது.

விளம்பரத்தின் மத்தியில் ஒரு மோசடி லிங்க் காணப்படும் எனவும், அதை அழுத்தினால் போன் பே, கூகுள் பே, பேடி.எம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுக்குள் சென்று விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் யு.பி.ஐ பின் எண்ணை பதிவு செய்தால், அவ்வாறு பதிவு செய்பவரின் வங்கி கணக்கில் உள்ள பணம் காலியாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. இது போன்ற போலி ரீசார்ஜ் விளம்பரங்களை புறக்கணிக்குமாறு கேரள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்