கண் முன் நடந்த ருத்ரதாண்டவம்.. "தங்கியிருந்த இடத்தில் இது தான் நடந்தது.." கடவுள் போல் காப்பாற்ற வந்த ஹெலிகாப்டர்.. எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த நபர்
கண் முன் நடந்த ருத்ரதாண்டவம்.. "தங்கியிருந்த இடத்தில் இது தான் நடந்தது.." கடவுள் போல் காப்பாற்ற வந்த ஹெலிகாப்டர்.. எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த நபர்
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
அங்கு நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அவர்கள், பயணத்தை தொடர முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து
தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
காலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடங்கிய நிலையில், 30 பேரும் பாதுகாப்பாக தாட்சுலா என்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அனைவரும் மருத்துவ பரிசோதனை முடிந்து, டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட அனைவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story