`நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்' - அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், சட்டப்பேரவை தேர்தலில் தனித்தே போட்டி என கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி இறுதியாகியிருப்பதாகவும், 15 இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்க உள்ளதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனை மறுக்கும் வகையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சொந்த வலிமையுடன் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கான எந்த சாதியமும் இல்லை என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்