கோயில் தூணை சுற்றிய படி பிரிந்த உயிர்.. "இப்படியெல்லாம் உயிர் போகுமா.." | Thanthitv
சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான விஷ்ணுவர்தன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், குகட்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலில் உள்ள தூணை சுற்றிக் கொண்டிருந்த போது, திடீரென விஷ்னுவர்தன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அவரை சிபிஆர் மூலம் காப்பாற்ற முயன்றனர். எனினும் அது பலனளிக்கவில்லை. அவசர மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் விஷ்ணுவர்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
Next Story