பாலியல் டார்ச்சர் கொடுத்தவனை ரோட்டுக்கு இழுத்து வந்து கன்னம் பழுக்க அறை விட்ட துணிச்சல் பெண்
பாலியல் டார்ச்சர் கொடுத்தவனை ரோட்டுக்கு இழுத்து வந்து கன்னம் பழுக்க அறை விட்ட துணிச்சல் பெண்
தெலங்கானாவில், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு, நடுரோட்டில் வைத்து இளம்பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகரில் இளம்பெண் ஒருவர் சாலையோரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அங்கு வந்த நபர் ஒருவர், அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண், அந்த நபரின் சட்டையைப் பிடித்து நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இசசம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்தப் பெண்ணிடம் புகாரை எழுதி வாங்கிய போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story