பள்ளியில் அதிர்ச்சி - 100 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.. 8 பேர் கவலைக்கிடம்
தெலுங்கானா மாநிலம் நாராயணபேட் பகுதியில் உள்ள மாகனூர் அரசுப் பள்ளியில் 100 மாணவர்களுக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளதால், மக்டல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உணவில் என்ன கலந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Next Story