சிறுமியை கொடூர பலாத்காரம் செய்த மிருகத்தை வீட்டோடு கொளுத்திய உறவுகள்
தெலுங்கானா மாநிலத்தில் இளைஞன் தனது வீட்டில் சிறுமியை கடத்தி மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம்.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞனின் வீட்டில் தீ வைத்துக் கொளுத்தினர்.
தடுக்க வந்த போலீசார் மீது சிறுமியின் உறவினர்கள் கல் வீச்சு தாக்குதல்.
இதில் ஒரு ஆய்வாளர் உட்பட ஐந்து காவலர்கள் காயம்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரில் இளைஞர் ஒருவர் அருகில் வசிக்கும் சிறுமையை வீட்டிற்கு அழைத்து ஆசை வார்த்தை கூறி வீட்டை அடைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர் வெளியே வரச் சொல்லியும் வராததால் கோபம் அடைந்த உறவினர் மற்றும் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் வருவதற்கு தாமதமாகவே அந்த வீட்டுக்கு தீ வைத்து எரிக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து உள்ளே இருந்த இளைஞனை மீட்டனர். இதனால் கோபமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த வீட்டிற்கு தீ வைத்தும் போலீசார் மீதும் போலீசார் வாகனத்தின் மீதும் கல் வீசி தாக்க தொடங்கினர். மேலும் இளைஞனின் உறவினர்கள் வீடுகள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. இச்சம்பவத்தில் இளைஞனின் வீடு முழுவதுமாக இருந்து சாம்பலாகின காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞனை போலீசார் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அளித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அதிக போலீசார் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞன் மீது தாக்குதலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவு வருகிறது.