சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்க்கு.. பெற்றோர் செய்த தரமான சம்பவம்
தெலுங்கானாவில், அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரை, பெற்றோர், செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மஹ்பூபாபாத் மாவட்டம், சீரோல் தொடக்கப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் தனது போனில் அங்கு படிக்கும் சிறுமியிடம் ஆபாச வீடியோக்களை காட்டி உள்ளார். இதை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியரை வெளியே வரவழைத்தனர். அப்போது, நடந்ததை கேட்டறிந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த மற்றொரு ஆசிரியர் தடுக்க முயன்ற நிலையில், உறவினர் ஒருவர் செருப்பால் அடித்தார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆசிரியரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story