டாடாவுக்கு திடீர்னு என்னாச்சு? - பதறிய இந்தியா
பிரபல தொழிலதிபர்,டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது 86 மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது ரத்த அழுத்தம் நள்ளிரவு 12.30 முதல் 1.00 மணிக்குள் வெகுவாக குறைந்ததால் உடனடியாக முதலில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்
இருதயநோய் நிபுணர் டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் நிபுணர்கள் குழு அவரது உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்
Raja Adityan
தனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் ரத்தன் டாடா விளக்கம்
பிரபல தொழிலதிபர்,டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது 86 மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி உலா வரும் நிலையில்
ரத்தன் டாடா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"எனது உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன், மேலும் இந்தக் கூற்றுகள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.
எனது வயதின் காரணமாக எடுக்கப்படும் மருத்துவ பரிசோதனை தற்போது செய்து வருகிறேன்.
யாரும் கவலைப்பட தேவையில்லை .நான் நல்ல மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்