படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம்!
படப்பிடிப்பின்போது தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். கல்கி 2898 திரைப்படம், ஜப்பானில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக, ஜப்பானில் நடைபெறும் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக தன்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது நடிகர் பிரபாஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பின்போது காலில் காயம் ஏற்பட்டதால், ஜப்பானுக்கு பயணம் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும், பிரபாஸ் விரைவில் குணமடைய தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story