Swiggy, Zomato-வில் வீடு தேடி வரும் மது.. டெல்லி முதல் தமிழகம் வரை..? | Thanthitv

x

டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் இதை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தற்போது, ​​ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் இதன் விளைவாக, ஆனலைன் விற்பனை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சில்லறை வணிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அசாமில் கொரோனா காலத்தில் மது விநியோகம் தற்காலிகமாக, கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கான வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்