நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு இன்று.. ஓட்டு மெஷின் வழக்கில் உச்ச நீதிமன்றம் பளீர்
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் முழுமையாக விவிபேடுகளை சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம்
இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டில், ேபாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபேடுகளையும் சரிபார்க்கக்கோரி பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தொழில்நுட்ப தரவுகளை அளிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதுவரை முறைகேடுகள் நடக்கவில்லை என்ற நீதிபதிகள், ஈவிஎம் வாக்குப்பதிவு முறையை மேம்படுத்த வேண்டுமென்றால், நிச்சயம் அதை செய்வோம் என்றர். அனைத்து சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெளியிட உள்ளனர்.