சன்னி லியோனுக்கு வந்த சோதனை - கனவிலும் நினைத்து பாரா பேரதிர்ச்சி... அரசையே ஏமாற்றிய ஒற்றை பேர்

x

சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி, மாதந்தோறும் அரசிடம் இருந்து ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்ற அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழக அரசு, குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருவதை போல் சத்தீஸ்கர் மாநிலத்திலும், அரசு சார்பில் மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை நேரடியாக பயனர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், சன்னிலியோன் என்ற பெயருடன் பயனாளி ஒருவர் இருந்தது தெரியவந்தது..இதில் பேரதிர்ச்சி என்னவென்றால், சன்னி லியோனின் கணவர் பெயர் ஜானி சின்ஸ் என குறிப்பிட்டு இருந்ததோடு இந்த பெயருடைய பயனாளர், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வந்ததும் தெரியவந்தது..

இதன் பின்னணியை ஆராய்ந்ததில், பஸ்தர் மாவட்டத்திலுள்ள தளூர் அங்கன்வாடியில் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற்றிருப்பது கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை அங்கன்வாடி அலுவலரும் மற்றொரு சூப்பர்வைசரும் உறுதி செய்து சான்று அளித்துள்ளதாக கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் தான், விரேந்திர ஜோஷி என்பவர் சன்னி லியோன் பெயரில் போலி கணக்கைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது...

அதிலும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 10 மாதங்களாக சன்னி லியோன் பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ள பஸ்தர் மாவட்ட ஆட்சியர் ஹரிஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இது தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்