மாதம் ரூ.1000 அரசு உதவித் தொகை பெற்றாரா சன்னி லியோன்? - ஆதாரத்தை பார்த்து அரண்டு போன அதிகாரிகள்

x

நடிகை சன்னி லியோனின் பெயரால் மாதந்தோறும் அரசிடமிருந்து ஒருவர் 1000 ரூபாய் உதவித் தொகை பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது... சத்தீஸ்கர் மாநில அரசின் சார்பில் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் நடிகை சன்னி லியோன் என்ற பெயரையும், அவரது கணவர் ஜானி சின்ஸ் என்றும் பயனாளிகள் பட்டியலில் சேர்த்து மாதம் தோறும் உதவித் தொகை பெற்று வந்துள்ளார் ஒரு ஆசாமி... பஸ்தர் மாவட்டத்திலுள்ள தளூர் அங்கன்வாடியில் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற்றிருப்பதும், விண்ணப்பத்திற்கு அங்கன்வாடி அலுவலரும் மற்றொரு சூப்பர்வைசரும் உறுதி செய்து சான்று அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சன்னி லியோன் மற்றும் ஜானி சின்ஸ் பெயரில் கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 மாதங்கள் உதவித்தொகையை பெற்றிப்பது தெரியவந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்