நீட் எழுதும் மாணவர்களுக்கு புதிய `அபார்' - நாடு முழுவதும் அறிவிப்பு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு பாதுகாப்பு ஐ.டி.,...
Apaar ID அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிப்பு
பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கூடுதல் நடவடிக்கை
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அப்பார் ஐடி என்ற கூடுதல் பாதுகாப்பு எண்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது, Appar ((Automated Permanent Academic Registry)) என்ற கூடுதல் பாதுகாப்பு ஐ.டி., ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே மாணவர்கள் ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன . அதோடு சேர்த்து ஒவ்வொரு மாணவருக்கும் இந்த புதிய கூடுதல் ஐடி-யும் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது முதல், கலந்தாய்வுக்கு செல்வது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் ஆதார் எண்களோடு இந்த அப்பார் ஐடி எண்களும் ஒப்பீடு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும்.
கடந்தாண்டு நீட் தேர்வில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்து மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தன. இதனை கருத்தில் கொண்டு முறைகேடுகள் நடக்காத வகையிலும், கலந்தாய்வின்போது போலியான மாணவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையிலும், இது போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.