ஸ்பேடெக்ஸ் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
- ஸ்பேடெக்ஸ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வில் இஸ்ரோ வரலாறு படைத்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
- குறைந்த செலவில், விண்வெளியில் வியக்கதகு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ, ஸ்பேடெக்ஸ் ஆய்வில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. SpaceDock Experiment என்பது விண்வெளியில் இரு விண்கலங்களை இணைப்பது மற்றும் இணைப்பை துண்டிக்கும் ஆய்வாகும். இந்தியாவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் டிசம்பர் 30-ல் விண்ணுக்கு சீறி பாய்ந்த PSLV C60 ராக்கெட் சேசர்- டார்கெட் என 2 விண்கலங்களை பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் நிறுத்தியது. இதனையடுத்து இரு விண்கலங்களையும் இணைக்க, இடைவெளி குறைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது முயற்சி தள்ளிப்போனது. இந்த சூழலில் இனிப்பு செய்தியாக இரு விண்கலங்களையும் இணைக்கும் Docking செயல்முறை வெற்றிக்கரமாக முடிந்தது என அறிவித்தது இஸ்ரோ.
Next Story