அவமானமாக இருப்பதாக கூறி மகன் தற்கொலை - சோகம்

x

புதுச்சேரியில் 19 வயது இளைஞரின் மரணம்.. குடும்ப நலன் கருதாமல் தங்களுக்கிடையேயான ஈகோவால் சண்டையிட்டு

கொள்ளும் தம்பதிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொண்டிருந்த பெற்றோருக்கு மகன் எழுதிய கடிதம்தான் இது...

ஏன் இருவரும் தொட்டதெற்கெல்லாம் சண்டையிட்டு கொள்கிறீர்கள்...

தெருவில் வைத்து ஒருவரையொருவர் தகாத வார்த்தையில் திட்டி நீங்கள் மோதிக் கொள்வது தனக்கு அவமானமாக இருக்கிறது...

ஒட்டு மொத்த தெருவும் உங்களின் சண்டையை வேடிக்கை பார்ப்பது தன்னை மன வேதனைகு ஆளாக்குவதாகவும் கூறி குமுறியிருக்கிறார் 19 வயது இளைஞர்...

(ப்ரீத் டிராக்)

ஆனால், இந்த கடிதத்தின் விலையாய், பெற்றோருக்கிடையேயான மோதலின் விபரீதமாய்.. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் கடிதம் எழுதிய மகனே தவறான முடிவை கையிலெடுத்து தன் உயிரை மாய்த்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

(ப்ரீத் டிராக்)

புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜான்பால் நகரில்தான் இந்த விபரீதச் சம்பவம்..

உயிரிழந்திருக்கும் இந்த சஞ்சய்க்கு 3 சகோதரர்கள் இருக்கின்றனர்..

இந்நிலையில், 9-ம் வகுப்பு முடித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த இவரை, பெற்றோருக்கிடையேயான தொடர் மோதலும், சண்டையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது...

(ப்ரீத் டிராக்)

இதனால், கடிதம் எழுதி வைத்து விட்டு சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடிதத்தில், இனிமேலாவது சண்டையிடாமல் இருங்கள் என குறிப்பிட்டு இளைஞர் உயிரை மாய்த்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்