இந்த புதிருக்கு விடை சொன்னால் ரூ.8.5 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு

x
  • சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் 8.57 கோடி ரூபாய் என்ற தமிழக அரசின் பரிசை தட்டிச் செல்லப்போவது யார்? என்பது குறித்து விவரிகிக்கிறது இந்த தொகுப்பு
  • உலகின் மிக முக்கியமான பண்டைய நதிக்கரை நாகரிகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம்..
  • சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல சிறப்புகளை கொண்ட நாகரிகம்.
  • இதுகுறித்து 1924 செப்டம்பர் 20-ல் ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரி சர் ஜான் மார்ஷல் வெளியிட்ட அறிக்கை வரலாற்றை திரும்பிப்பார்க்க செய்தது.
  • பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்தவர், சிந்துவெளி மக்கள் காலம் ஆரியர்களுக்கு முந்தைய காலம் என்றார்.
  • இதில் முக்கியமான ஒன்று சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட நகர கட்டமைப்பு, பகடை காய்கள், பானைகள், விளையாட்டு பொருட்கள் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களும் ஒத்துப்போகின்றன.
  • பானைகளில் காணப்படும் கீறல்கள் மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழியாக கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்
  • என்பது அறிஞர்களின் கருத்து.
  • இந்த எழுத்துக்களை படிக்கும் போது இந்தியாவின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது என்பதும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.
  • சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்றார் ஐராவதம் மகாதேவன் .
  • சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறை படிக்கப்படவில்லை, வாசிக்கப்படவில்லை... ஆனால் வாசிக்க முயன்றவர்கள் எழுத்துருக்கள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது என்ற கருத்தை முன்வைப்பதாக சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்..
  • இப்போது வழக்கத்திலிருந்து அழிந்து போன ஒரு மொழியை வாசிக்க வேண்டும், இந்த புதிரை உடைக்கவே ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
  • பல நூற்றாண்டாக தொடரும் இந்த புதிரை உடைத்து, பரிசை தட்டிச் செல்லப்போவது யார்? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே... இதற்கு பதில் சொல்லி பரிசை தட்டிச் செல்லும் ஆராய்ச்சியாளர்...? யார் என்பதை பொறுத்திருந்து காணலாம்...

Next Story

மேலும் செய்திகள்