சற்று நேரத்தில் பதவியேற்பு விழா - தடபுடலா நடக்கும் ஏற்பாடுகள்
மக்களவைத் தேர்தலோடு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜூன் 2ம் தேதி வெளியான நிலையில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிரந்தீகாரி கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தின் புதிய முதல்வராக பிரேம் சிங் தமாங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்கவுள்ளார்... சிக்கிம் மாநில தலைநகர் கேங்டாக்கில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்... பிரேம் சிங் தமாங்கிற்கு சிக்கிம் மாநில ஆளுநர் லக்ஷ்மன் ஆச்சார்யா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் 12 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு கேங்டாக்கில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...